இரட்டை குடியுரிமை விவகாரம்: ஈ.பி.டி.பி ஜெகனிற்கு சபை நடவடிக்கையில் கலந்துகொள்ள தடை!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (ஜெகன்) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் அமர்வில் வாக்களிக்கவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்காலக் கட்டளை வழங்கியது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் இரட்டைக் குடியுரிமை உடையவர் எனவும் இலங்கை தேர்தல் விதிகளுக்கு அமைவாக அவர் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் விதியை மீறி தேர்தல்கள் ஆணைக்குழுவும் யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சார்ந்த கே.வி.குகேந்திரனுக்கு உறுப்புரிமை வழங்கியதை வெற்றும் வெறிதானதும் என உத்தரவிடவேண்டும் என மனு தாரரால் கோரப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நியமனப்பட்டியல் உறுப்பினரான லோகதயாளன் என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான தீர்ப்பை வழங்கும்வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை உத்தரவையிடவேண்டும் எனவும் மனுதாரரால் நிவாரணம் கோரப்பட்டது.

மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு நேற்று இடைக்காலக் கட்டளையை வழங்கியது.

மனுதாரர் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here