ஆண் நண்பர் மீது திருநங்கை எஸ்.ஐ போலீஸில் புகார்

பேஸ்புக் மூலம் பழகி நட்புடன் இருந்த ஆண் நண்பர் தற்போது தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக முதல் திருநங்கை எஸ்ஐயான பிரித்திகா யாஷினி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற சிறப்பைப் பெற்றவர் திருநங்கையான பிரித்திகா யாஷினி. இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் கடலூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்ற இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நட்புடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரித்திகா யாஷினி, அவரைப் பிரிந்துள்ளார்.

இருப்பினும் ஜனார்த்தனன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக பிரித்திகா யாஷினி, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞரை அழைத்து போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here