நுளம்புகளை மலடாக்கி டெங்கு ஒழிப்பு ஆய்வு வெற்றி!

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட டெங்கு நுளம்புகளை மலடாக்கியதன் மூலம் டெங்குகாய்ச்சலை பரப்பப்படுவதை 80 வீதம் வரை ஒழிக்க முடியும் என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

CSIRO என்றழைக்கப் படும் அவுஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் இயக்கத்தின் ஆய்வாளர்கள், கடிக்கும் தன்மை கொண்டிராத ஆண் ஏடிஸ் நுளம்புகளை ஜேம்ஸ் கூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கூடத்தில் வைத்து அவற்றின் மீது சோதனைகளை நடத்தி வந்தன.

‘வால்பாஷியா’ கிருமியினால் தாக்கப்பட்டதால், அந்த ஆண் ஏடிஸ் நுளம்புகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்று தெரிவிக்கப் பட்டது. அந்த ஆண் நுளம்புகள் அதன் பின்னர், குயின்ஸ்லாந்தில் உள்ள இன்னிஸ்பேய்ல் என்ற பகுதியில் பறக்க விடப் பட்டன.

அந்த ஆண் நுளம்புகள் கடந்த மூன்று மாதங்களாக பெண் நுளம்புகளுடன் உறவு வைத்துக் கொண்டன. முட்டையிட்ட பெண் நுளம்புகளுடன் அந்த ஆண் நுளம்புகள் உறவு கொண்டன.

ஆனால், அந்த முட்டைகளிலிருந்து நுளம்புக் குஞ்சுகள் பொரிக்கவில்லை. இதனால், அந்தக் நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கவில்லை. இந்த மலட்டு ஆண் நுளம்புகளை ‘உருவாக்கியதன்’ வாயிலாக, அந்தப் பகுதியில் டெங்குக் காய்ச்சல்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

இது தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஜேம்ஸ் கூக் பல்கலைக்கழகத்தின் கைரன் ஸ்டவுண்டண்ட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here