கடைசியில் ஜாமீனில் வந்து நடிகையை திருமணம் செய்த பிரபல நடிகரின் மகன்!

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மகா அகபஷாய்யின் திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. ஜாமீனில் வந்து தென்னிந்திய நடிகை மடாலா ஷர்மாவிற்கு தாலி கட்டியுள்ளார்.

மிதுன் சக்கரவரத்தியின் மகன் மகா அகபஷாய். இவர் இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடித்து வருகிறார். மும்பையைச் சேர்ந்த போஜ்புரி நடிகை ஒருவர், மகா அகபஷாய் தன்னை திருமணம் செய்வதாக கூறி, 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் உதகையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மகா அகபஷாய்வுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த சனிக்கிழமை திருமணம் நடக்கவிருந்தது.
இதனையறிந்த அந்த நடிகை, டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகா அகபஷாய் திருமணம் அதிரடியாக கடந்த 7ஆம் தேதி நிறுத்தப்பட்டது

தற்போது, நின்று போன தனது திருமணத்தையடுத்து 2 நாள்களில் ஜாமினில் வெளிவந்த நடிகர், மீண்டும் திருமணம் செய்துக் கொண்டார். தனது திருமணம் தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here