ரஷ்ய சிறுவனுக்கு தமிழரின் இதயம்!

ரஷ்யாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவருக்கு நன்றி கூறும் விதமாக தன்னுடன் இணைந்து ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளான்.

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு, கடந்த நவம்பர் மாதம் தான் ரஷ்யாவைச் சேர்ந்த சிறுவன் ரோமன் அறிமுகமானார். இதயத் தசை நோயின் காரணமாக சிறுவன் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அறிந்த மருத்துவர், அவனுக்கு பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவனுக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

“உங்களது மகனுக்கு இதயக்கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் நிச்சயமாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். என அவனது தாயிடம் மருத்துவர் எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனால் அவ்வளவாக படிப்பு இல்லாத அவனது தாய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார், இருப்பினும் ரோமனுக்கு இதயம் எங்காவது தானமாக கிடைத்துவிடுமா? என்ற ஆர்வத்தில் மருத்துவரிடம் இது தொடர்பாக கேட்டார்.

இதற்கிடையில் ரோமனுக்கு திடீரென இதய வலி அதிகரித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோமனுக்கு வலி ஏற்படாத வகையில் 45 நிமிடங்கள் மருத்துவர் பாலகிருஷ்ணன் சிகிச்சை அளித்தார்.

அந்த சமயத்தில் தான் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்தது. அதில் மூளைச்சாவு அடைந்த ஓர் இளைஞரின் இதயம் தானத்திற்கு தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

சுமார் 35 சதவீகிதம் மட்டுமே இயங்கக் கூடிய அந்த இதயத்தினை மருத்துவர்கள் பலரும் நிராகரித்து விட்டனர். ஆனால், மருத்துவர் பாலகிருஷ்ணன் அதனையும் மீறி, சிறுவனுக்கு இதயத்தை பொருத்தி வெற்றி பெற்றார்.

இளைஞரின் இதயம் என்பதால் ஆரம்பத்தில் சிறுவன் சிரமப்பட்டாலும் பின்னர் மெல்ல மெல்ல உடல் நிலை குணமடைந்து மீண்டும் ரஷ்யாவுக்கு திரும்பினார்.

இந்நிலையில் சிறுவன் ரோமன் தனக்கு இதயத்தை பொருத்திய மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியை நேரில் தன்னுடன் இணைந்து பார்க்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here