வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக பெண்ணொருவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுனரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுனரை சந்திக்கவும், தனக்குரிய சம்பள நிலுவையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரியுமே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆசிரியையாக கடமையாற்றிய இவரது சம்பள நிலுவை வழங்கப்படாத நிலையில் உள்ளது. இதை பெறுவதற்கு முயற்சித்து வருகிறார். அது கைகூடாத நிலையில், ஆளுனரை சந்திக்க பலமுறை முயன்றுள்ளார். எனினும், அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை.
இன்றைய தினமும் ஆளுனரை சந்திக்க பெண் வந்திருக்கிறார். எனினும், ஆளுனரை சந்திக்க அனுமதி வழங்கப்படாததையடுத்து, ஆளுனர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Loading...