இறந்ததாக கருதப்பட்ட இராணுவ அதிகாரி 40 வருடத்தின் பின் குடும்பத்துடன் இணைந்தார்!

கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார் என்று கருதப்பட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் மண்டலா மாவட்டத்தில் கடந்த வாரம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் எனக்கு ஆயுதங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அவை எப்படி இயங்குகின்றன எனத் தெரியும்’ என்று கூச்சலிட்டிருக்கிறார். அரைகுறை இந்தியில் அவர் பேசினாலும் கூட பார்ப்பதற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிந்தாலும்கூட நக்சல் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் அப்பகுதி மக்களுக்கு உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே தில்காம் காவல் நிலைய போலீஸார் அங்கு விரைந்துவந்து அந்த நபரை பிடித்தனர். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் போலீஸார், எனக்கு ஆயுதங்கள் பற்றித் தெரியும் என இந்தியும் மலையாளமும் கலந்து பேசியிருக்கிறார். இதனால் அந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

மோண்டியாலால் தேவாலயத்தில் உள்ள கன்னியாஸ்திரி மெர்சியின் உதவியை அவர்கள் நாடினர். அவர் போலீஸுக்கு உதவியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த நபரின் பெயர் சந்தோஷ் குமார் என்பதும். கடந்த 2006-ல் சிக்கிமில் பணியில் இருந்ததும் தெரியவந்தது. 2007-ல் அவரது இடது கண்ணில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அவருக்கு மனநலனும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், சந்தோஷ் விருப்ப ஓய்வு பெற்று ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

ஓய்வு பெற்று ஊர் திரும்ப முற்பட்டவர் தனது சொந்த ஊரான கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்துக்குச் செல்வதற்கு பதிலாக 11 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித் திரிந்திருக்கிறார்.

மண்டலா வந்தடைந்த அவரை போலீஸார் ஒருவழியாக அடையாளம் கண்டுபிடித்தனர். சந்தோஷை சுத்தப்படுத்தி புதிய உடை, ஷூ சகிதமாக ஃபோட்டோ எடுத்த போலீஸார் அதை கேரள போலீஸாருக்கு அனுப்பியிருக்கின்றனர். சந்தோஷின் உறவினர்கள் மண்ட்லா போலீஸாரை தொடர்பு கொண்டனர். பின்னர் அவர்கள் மத்தியப் பிரதேசத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தில்காம் காவல் நிலையத்துக்கு வந்த தனது சகோதரர்களை சந்தோஷ் எளிதாக அடையாளம் கண்டிருக்கிறார். அதேபோல் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றபோதும் 14 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தங்கள் பாரம்பரிய வீட்டையும் சரியாக அவர் அடையாளம் கண்டிருக்கிறார். வீட்டின் உறுப்பினர்கள் அனைவரையும் சரியாக அடையாளம் கண்டிருக்கிறார். ஆனால், சில நேரங்களில் சற்று வித்தியாசமாக நடந்துகொள்வதால் அவரை மனநல ஆலோசகரிடம் காண்பித்து சிகிச்சைக்கு உட்படுத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here