ப.சிதம்பரம் வீட்டில் திருடிய 2 சகோதரிகள் கைது

ப.சிதம்பரத்தின் வீட்டில் நகை, பணம் திருடுபோன சம்பவத்தில், அவரது வீட்டில் வேலை செய்துவந்த 2 சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு சென்னையில் நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் தோட்ட சாலை யில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில், வீட் டில் இருந்த நகைகள், ரூ.1.10 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் திருடுபோயின.

புகாரின்பேரில், ஆயிரம்விளக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.ப.சிதம்பரம் வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், வீட்டில் வேலை செய்யும் பெண்களே முகத்தை துணி யால் மறைத்துக்கொண்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, கோடம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சகோதரிகள் விஜி (50), வெண்ணிலா (45) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ப.சிதம்பரம் வீட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here