மூத்த தளபதி விக்டரின் சகோதரியும் தேசியக் கூட்டமைப்பில் களமிறங்குகிறார்!


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது லெப்டினன்ட் கேணலான விக்டரின் சகோதரி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களமிறங்குவார் என அறிய வருகிறது.

முன்னாள் மன்னார் மாவட்ட தளபதியான விக்டர், மகளிர் படையணியை முதன்முதலில் களத்திலிறக்கினார். அடம்பனில் நடந்த அந்த மோதலில் இரண்டு இராணுவச்சிப்பாய்கள் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தனர். அந்த மோதலில் விக்டர் மரணமாகினார்.

விக்டரின் சகோதரியான மாலினி மடு வலய கல்விப் பணிப்பாளராக செயற்பட்டவர். அந்த பிராந்தியத்தின் முக்கியமான பெண் ஆளுமையாக அறியப்பட்ட அவர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது.

தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சியொன்று அவரை அணுகியதை தமிழ்பக்கம் அறிந்தது. அது குறித்து அவர் சாதகமாக பரிசீலித்து வருவதாக தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here