வவுனியாவில் இராணுவ வாகனமும் பஸ்சும் கோர விபத்து: ஒருவர் பலி!

புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து: ஒருவர் மரணம் 4 பேர் படுகாயம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது-
வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவத்தினருக்கு பொருட்களை கொண்டு  சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும், பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜேனி ரக பஸ்ஸும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஹென்ரேனர் ரக வாகன சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here