மான் வேட்டை: சல்மானை தப்புவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? முக்கிய சாட்சியின் பேட்டி

சல்மான் கான் வழக்கில் முக்கிய சாட்சியமாக இருந்த நபர் முதன்முதலாக ஊடகங்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.

பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த சாகர்ராம் பிஷ்னோய் அளித்த பேட்டியில், கொல்லப்பட்ட மானின் உடம்பை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தது தாம்தான் என்று கூறுகிறார்.

விசாரணையின் போது சல்மான் கான், சயிஃப் அலி கான், தபு, நீலம் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோரை இறந்து போன கலைமான் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றவர்களில் சாகர்ராம் பிஷ்னோயும் ஒருவர்.

அரிய வகை கலைமான்களை வேட்டையாடிய வழக்கில் சிறை தண்டனை பெற்று இரண்டு நாளில் பிணையில் வெளிவந்துள்ளார் சல்மான் கான்.

அவரைத் தவிர பிற நடிகர்கள் அந்த வழக்கலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

1998ஆம் ஆண்டு ஜோத்பூர் மாவட்டத்தில் வனக்காப்பாளராக இருந்த சாகர்ராம், 2018ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி உதவி சார் ஆய்வாளராக பணியிலிருந்து விடைபெற்றார்.

“நான் பணியில் இருந்ததால் இந்த வழக்கு குறித்து பேசியது இல்லை. மேலும் இது குறித்து எனது மேலதிகாரிகளே பேசி வந்தனர்” என்கிறார் சகார்ராம்.

இந்த வழக்கில் டஜன் கணக்கானோர் சாட்சியங்களாக இருந்தனர்; அதில் ஐந்து பேர், அரசுத் தரப்பு சாட்சியாக இருந்தனர் அதில் சாகர்ராம் பிஷ்னோய் இரண்டாம் சாட்சி ஆவார்.

நடு இரவில் கன்கனி கிராமத்தில், சல்மான் உள்ளிட்டோர் கலைமானை வேட்டையாடியதை அங்கிருந்த மூன்று பேர் பார்த்து ராஜஸ்தானில் உள்ள குடா பகுதியில் இருக்கும் வனக் காப்பகத்தில் 1998 அக்டோபர் 2 அன்று புகார் தெரிவித்தனர்.

37 வருடத்துக்கு பிறகு அரசுப் பணியில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள சாகர்ராம், 20 வருடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடைபெற்ற போது பறக்கும் படை காவலராக இருந்தார்.

கலைமான்களின் உடலை கைப்பற்றிய பிறகு அவரின் மேலதிகாரியின் பார்வைக்காக அதை அவரின் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றதாக கூறுகிறார்.

மேலும் விசாரணைக்காக அவரின் மேலதிகாரி உத்தரவுப்படி மருத்துவர் நேபாலியாவின் ஆய்வு கூடத்துக்கு விலங்கின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது .

“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று டாக்டர் நேபாலியா விடுமுறையிலிருந்தார். பிறகு எங்கள் துறையை சேர்ந்த உடற்கூறு ஆய்வு மருத்துவர், நேபாலியா தடயவியல் அறிக்கையை சில நாட்களில் கொடுக்க தான் உதவுவதாக தெரிவித்தார். அது தாமதமாக வந்தது. ஆனால் மான்கள் இயற்கையாக இறந்தன என அதில் கூறப்பட்டிருந்தது. தற்போது அதைதான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை” என்கிறார் சாகர்ராம்.

சல்மானுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய ஜோத்பூர் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில், நேபாலியாவின் விசாரணையை எதிர்த்து, ராஜஸ்தான் வனத்துறை வழக்குப் பதிவு செய்து அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்த குழுவிலும் சாகர்ராம் இருந்துள்ளார்.

“கலைமானின் உடம்பில் குண்டு துளைத்திருந்தது தெளிவாகத் தெரிந்தது” என நினைவு கூர்கிறார் சாகர்ராம்.

இரண்டாம் முறை நடைபெற்ற பரிசோதனையில் மான்கள் துப்பாக்கி குண்டு துளைத்துதான் இறந்தன என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சல்மான் கான் மற்றும் நடிகர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு சல்மான் கான் கலைமானை சுட்டார் என தெளிவாக கூறுகிறது,

குற்றம் நடைபெற்ற கன்கனி உள்ளிட்ட 32 கிராமங்கள் அடங்கிய வன சோதனைச் சாவடிக்கு குற்றம் சுமத்தப்பட்ட ஐவரும் சோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த சகர்ராம் பிஷ்னோய் இந்த வழக்கில் சல்மான் கானுக்கு எதிராக இரண்டு தசாப்தங்களாக போராடி வருகிறார். அவரின் நோக்கம் என்ன? என்று கேட்கப்பட்டபோது, சிரித்து கொண்டே பதிலளித்த அவர்- நான் இதை நீதிமன்றத்திடமும் விவரித்துக் கொண்டிருந்தேன். சல்மான் கானின் வழக்கறிஞர் பெரும்பாலான சாட்சிகள் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தார்களாக இருப்பதால் இது ஒரு சார்பாக உள்ளதாக வாதிட்டார்.

“நூற்றுக்கணக்கான வருடங்களாக பிஷ்னோய் மக்கள் வசித்து வரும் பகுதியில் வேறொருவர் எவ்வாறு வனக் காப்பாளராக இருப்பார் என நீங்கள் கூறுங்கள்?” என்கிறார் அவர்.

அந்த சம்பவம் நடைபெற்ற போது நான் நிறைய பேரிடம் பேசினேன். அவர்களும் வேட்டையாடப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவது போலதான் தெரிவித்திருந்தனர்.

இவை அனைத்தும், இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சாகர்ராம் பிஷ்னோய் பகிர்ந்து கொண்ட கருத்துக்களாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here