கமல் குணரட்ண நாளை விசாரணை வலயத்திற்குள்!

நாளைய தினம் (11) விசாரணைக்கு வருமாறு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. கொலைக்குற்ற முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

பிரேஸிலுக்கான உதவி தூதுவராக செயற்பட்ட காலத்தில் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரை தாக்கி கொலை செய்ததாக கமல் குணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2013 நபவம்பர் மாதம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிமல் ரூபசிங்க என்ற நபர் கொல்லப்பட்டார்.

நிமல் ரூபசிங்க தனக்கு நடக்கும் கொடூரங்களை இலங்கையில் உள்ள தனது மகளுக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். 2013 நவம்பர் 2ம் திகதி மகளுக்கு அழைப்பெடுத்த ரூபசிங்க தான் மீண்டும் இலங்கைக்கு வருவதாக அறிவித்துள்ளார். தந்தை நாட்டுக்கு வராத காரணத்தால் வௌிவிவகார அமைச்சில் மகள் முறையிட்டுள்ளார். அப்போது தந்தை சேவையை விட்டு சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக அலுவலகத்திற்கு வௌியில் குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை முன்னெடுப்பது கேள்விக்குறியாக இருந்தது. எனினும் பிரேசில் பொலிஸாரிடம் இதுகுறித்து தகவல் அறிய இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here