22ம் திகதிய யாழில் நியமனம் பெறும் தொண்டர் ஆசிரியர்களின் விபரம்!

வரும் 22ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ரணில் விக்கிரமசிங்கவினால் 457 தொண்டர் ஆசிரியர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. யாழ் இந்துக்கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்கவுள்ளது.
தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் முதற் கட்டமாக  182 பேருக்கு அண்மையில் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக 457 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் 06 பேர் தேசிய பாடசாலைகளுக்கும் 451 பேர் மாகாண பாடசாலைகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
தீவக பகுதிகளுக்கு 40 பேரும், யாழ் கல்வி வலயத்திற்கு 29 பேரும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு 142 பேரும், மடு கல்வி வலயத்திற்கு 04 பேரும், மன்னார் கல்வி வலயத்திற்கு 14 பேரும், முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு 59 பேரும், தென்மராட்சி கல்வி வலயத்திற்கு 10 பேரும், துணுக்காய் கல்வி வலயத்திற்கு 21 பேரும், வடமராட்சி கல்வி வலயத்தற்கு 34 பேரும், வலிகாமம் கல்வி வலயத்திற்கு 39 பேரும், வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு 16 பேரும், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு 49 பேருமாக மொத்தமாக 457 பேர் நியமனம் பெறுகிறார்கள்.
நியமனம் பெறுபவர்களுக்கு ஆசிரியர் பயிற்சிகள் வழங்கப்படும். இனிமேல் எக்காரணம் கொண்டும் தொண்டர் ஆசிரியர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் அரசு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here