நீளம் பாய்தலில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தங்கம்!

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 20 வயப்பிரிவு பெண்களுக்கான நீளம் பாய்தலில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணிக்குத் தங்கப்பதக்கம் கிடைத்தது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டி நடைபெற்றது. உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஏ.அபினயா 5 மீற்றர் நீளத்துக்குப் பாய்ந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த பி.பவித்திரா 4.79 மீற்றர் நீளத்துக்குப் பாய்ந்து வெள்ளிப்பதக் கத்தையும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தை சேர்ந்த ஏ.மேரி தயந்தினி 4.75 மீற்றர் நீளத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here