யாழில் திருடப்பட்ட ஆடுகள் இணையத்தில் விற்பனை… விளம்பரத்தை பார்த்து மடக்கிய பொலிஸ்!

அச்­சு­வே­லி­யில் ஆடு திரு­டி­ய மூவரை கைது செய்துள்ளதுடன், திருடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளதாக அச்­சு­வே­லிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கடந்த மாதம் அச்­சு­வே­லி­யில் மூன்று ஆடு­கள் வீட்­டி­லி­ருந்து இரவு திரு­டப்­பட்­டு­விட்­டன என்று அதன் உரி­மை­யா­ளர் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.

இந்­த­நி­லை­யில், இணை­யத்­த­ளம் ஒன்­றில் ஆடு­கள் விற்­ப­னைக்­குள்­ளன என்று விளம்­ப­ரப்­ப­டுத்­தப் பட்­டுள்­ளது. அதைப் பார்த்த திரு­டப்­பட்ட ஆடு­க­ளின் உரி­மை­யா­ளர், அச்­சு­வே­லிப் ­பொ­லி­ஸா­ருக்கு அறி­வித்­தார்.

அவற்றை விற்­க­வி­ருந்த நபர், தான் வேறொ­ரு­வ­ரி­டமே ஆடு­களை 25 ஆயி­ரம் ரூபா­வுக்கு வாங்­கி­ய­தா­க பொலிஸ் விசாரணையில் கூறி­யுள்­ளார். விற்­ற­வர்­க­ளைப் பொலி­ஸார் கைது செய்­த­னர்.

அவர்­கள் அச்­சு­வே­லி­யில் அவற்­றைத் திருடி மோட்­டார் சைக்­கிள் மூல­மாக வல்லை வீதி­வரை கொண்­டு­சென்று அங்­கி­ருந்து முச்­சக்­கர வண்டி மூல­மாக நெல்­லி­ய­டிக்­குக் கொண்­டு­சென்று விற்­பனை செய்­த­தா­கக் கூறி­னர். மூவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் விசா­ர­ணை­யின் பின்­னர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர். அவர்­கள் 27, 29, மற்­றும் 26 வய­து­டை­ய­வர்­கள் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here