ரணில்- TNA ‘டீல்’ நாட்டுக்கு கேடாம்!

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்த 10 கோரிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இணங்கியிருப்பதானது இரு தரப்புக்குமிடையில் ‘டீல்’ இடம்பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுகிறது என்று கூறியுள்ள  ஜி.எல். பீரிஸ், இது பாரிய பின் விளைவுகளை உருவாக்கும் என எச்சரித்துமுள்ளார்.

டீலின் அடிப்படையில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் 65 ஏக்கர் நிலம் உரியவர்களுக்கு விடுவிக்கப்படும் அதேவேளை வடபகுதி மாவட்ட செயலகங்களில் தமிழரை நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்த இனத்தவரும் நாட்டின் எப்பகுதியிலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரத்துக்கு இச்செயல் மாற்றமானது என ஜி.எல். தெரிவிக்கிறார்.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here