நேற்றிரவு நடந்த சுற்றிவளைப்பில் அழகிகள் சிக்கினர்

கொழும்பில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை, ராஜகிரியவில் நேற்றிரவு விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மடபாத்த, சிலாபம், ராஜகிரிய, பலங்கொடை, மெதகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 23, 24 மற்றும் 28 வயதுடைய இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிலர் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 7.45 மணியளவில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here