பிரகாஷ்ராஜ் – அனுபமா பரமேஸ்வரன் மோதலா?

தெலுங்கில் தற்போது ஹலோ குரு பிரேம கோஸம் என்ற படத்தில் ராமிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் அனுபமாவின் அப்பா வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ்க்கும், அனுபமாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் கடும் மோதல் ஏற்பட்டதாகவும், அதையடுத்து அவர்களை டைரக்டர் செட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் டோலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது பிரகாஷ்ராஜூடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அனுபமா பரமேஸ்வரன் அந்த செய்தியை மறுத்துள்ளார்.

யாரோ திட்டமிட்டு இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டதாக தெரிவித்துள்ள அவர், பிரகாஷ்ராஜ் எனது தந்தை போன்றவர். அவருடன் நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்தியைக்கேட்டு காமெடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here