விக்கி ஆன்மீக சுற்றுலா; ஆளுனர் விசாரணை- தமிழரசுக்கட்சிக்கு அடுத்த பிடி!

வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் இரண்டு வார ஆன்மீக பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார். இந்த காலத்தில் பதில் முதலமைச்சராக கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் பதவிவகிப்பார்.

அரசியல் நெருக்கடிகள் உச்சமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், திடீரென இந்திய ஆன்மீக பயணத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். வடக்கில் அவரது அமைச்சர்களிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் இந்தியா சென்றிருக்கிறார்.

இதேவேளை, அமைச்சர்கள் மீதான புதிய குற்றச்சாட்டின் பின்னணியில் அமைச்சுக்களில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட செயலாளர்களே இருப்பதை தமிழ் பக்கம் உறுதிசெய்துள்ளது. தம்மை பந்தாடிய முதலமைச்சர், அமைச்சர்களை பழிவாங்க இந்த விவகாரங்களை லீக் செய்துள்ளனர். கல்வியமைச்சின் செயலாளராக இருந்த ரவீந்திரன் செய்தியாளர் ஒருவரிடம் நேரடியாகவே இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்களை தமிழரசுக்கட்சியும் ஒரு ஆயுதமாக பாவிக்க ஆயத்தம் செய்து வருகிறது. இதன் ஒருகட்டமாக அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆளுனருக்கு பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதற்கட்ட விசாரணைகளை ஆளுனர் செயலகம் ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் முடிவில் தமது அரசியல் தேவைகளிற்கு ஏற்ப, அறிக்கைகளை தயாரிக்கும் பின்னணி முயற்சிகளை முதலமைச்சருக்கு எதிரான அணி மேற்கொள்ளுமென தெரிகிறது. இப்படியொரு அறிக்கை தயாரிக்கப்பட்டால், முதலமைச்சருக்கு அது மேலும் தலையிடியை கொடுக்கும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழரசுக்கட்சியின் முக்கிய ஆயுதமாக அது இருக்குமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here