பாலச்சந்திரன், இசைப்பிரியா படத்திற்கு இலங்கையில் தடை: உணர்ச்சிமயமாக உள்ளதாம்!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ படத்தை இலங்கையில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படத்தில் “உணர்ச்சி அதிகமாக“ உள்ளதால் அனுமதிக்க முடியாதென தணிக்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்படத்தை ஈழன் இளங்கோ டைரக்ட் செய்துள்ளார். படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் 19-ந் திகதி தணிக்கை பெறுவதற்காக கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்தனர். டைரக்டரின் பிரதிநிதிகள் எவ்வளவோ முயன்றும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இடம் பெறவில்லை. இருந்தும் படம் திரையிட ஏன் தடை விதிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, “படத்தில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், வசனங்களும், ஒரு பாடலும் மிகவும் உணர்ச்சி மயமாக உள்ளது. சனல் 4-ல் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பாலசந்திரனும், இசை பிரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கும், ராணுவத்தினருக்கும் எதிராக உள்ளது. இலங்கையில் படத்தை திரையிட அனுமதித்தால் பல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here