தங்கம் வென்ற கிளிநொச்சி மகா வித்தியாலயம்!

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பெண்­கள் பிரிவு 800 மீற்­றர் ஓட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யம் தங்­கப்­ப­தக்­கம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் போட்­டி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. நேற்று நடை­பெற்ற 20 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான 800 மீற்­றர் ஓட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்­தை சேர்ந்த ரி.டென்­சிகா 2 நிமி­டங்­கள் 33 செக்­கன்­கள் 30 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்­துத் தங்­கப்­ப­தக்­கத்­தைத் தன­தாக்­கி­னார்.

முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூ­ரி­யை சேர்ந்த எஸ்.டிலக்­சனா 2 நிமி­டங்­கள் 36 செக்­கன்­கள் 50 மில்லி செக்­கன்­க­ளில் இலக்கை அடைந்து வெள்­ளிப்­ப­தக்­கத்­தை­யும், யாழ்ப்­பா­ணம் திருக்­கு­டும்­பக் கன்­னி­யர் மடத்­தை சேர்ந்த ஏ.ஆன் 2 நிமி­டங்­கள், 37 செக்­கன்­கள், 90 மில்லி செக்­கன்­க­ளில் இலக்கை அடைந்து வெண்­க­லப் ­ப­தக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here