சக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க சுமந்திரனின் பிரச்சார பிரிவிற்கு உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உருவாக்கப்பட்டுள்ள சமூக ஊடக பிரச்சார பிரிவு தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

சமூக ஊடகப் பிரச்சார பிரிவில் பணியாற்றி வரும் பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்துடன் பேசும்போது, தாம் இதுவரை 200 போலி கணக்குகள் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

தமது அணியில் சுமார் 15 அணியினர் செயற்பட்டு வருவதாகவும், அனைவருக்கும் இலவச வைபை இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, சுமந்திரன் சார்பாக கருத்துக்களை உருவாக்க மாதாந்த கொடுப்பனவில் சிலர் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எழுதி மின்னஞ்சலில் அனுப்பும் விடயங்களை தாம் முகப்புத்தகத்தில் பதிவேற்றுவதே தமது பணியெனவும் தெரிவித்தனர்.

இதேவேளை, அதிக வாக்கு பெறுவார்களென எதிர்பார்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்கும் நடவடிக்கையையும் தாம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதன்படி, இன்று பங்காளிக்கட்சியின் தலைவரான த.சித்தார்த்தனை இலக்கு வைத்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் ஒருமுறைதான் உரையாற்றினார் என மீம்ஸ் உருவாக்கி, நாளை தொடக்கம் அதிகம் பகிரும்படி, சமூகவலைத்தள பிரிவை வழிநடத்தும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here