கணவனின் கொலைக்கு நீதி வேண்டி ஒரு மாத குழந்தையுடன் வீதிக்கு இறங்கிய பெண்!

திரு­கோ­ண­மலை நிலா­வெளிப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இலுப்­பங்­கு­ளத்­தில் கொலை செய்­யப்­பட்ட இரா­ஜ­ரத்­தி­னம் சுரே­ஸின் சாவுக்கு கார­ண­மான கொலை ­யா­ளி­களைக் கைது செய்­யக்­கோரி கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நேற்று நடத்­தப்­பட்­டது.

கொலை செய்­யப்­பட்ட சுரே­ஸின் மனைவி ஒரு மாதக் கைக்­கு­ழந்­தை­யு­டன் போராட்­டத்­தில் கலந்­து­ கொண்­டார்.

கடந்த மாதம் 28ஆம் திகதி சுரேஸ் இனந்­தெ­ரி­யா­தோ­ரால் கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தார். இது­வரை கொலை­யா­ளி­கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இத­னைக் கண்­டித்து நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நிலா­வெ­ளி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

‘சுரேஸ் திட்­ட­மிட்­டுக் கொலை செய்­யப்­பட்­டார். சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை தொடர்­பில் கண்­ட­றிந்­த­மை­யி­னால் அவ­ரைக் கொலை செய்­துள்­ள­னர். இது­வரை கொலை­யா­ளி­க­ளைப் பொலி­ஸார் கைது செய்­ய­வில்லை. கொலை­யா­ளி­களை உடனே கைது­செய்­ய­வேண்­டும்’ என்று போராட்­டத்­தில் கலந்­து­கொண்­டோர் தெரி­வித்­த­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here