நடனமாடிய அழகியை பிடித்து ஜெயிலில் போட்ட பொலிசார்

இரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். மதே ஹோஜப்ரி என்ற அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்.

அவர் அண்மையில் தனது சமூக ஊடக கணக்கில் இரான் மற்றும் மேற்கத்திய இசைக்கு நடனமாடும் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு ஆதரவாக ஏராளமான இரான் பெண்கள் #dancing_isn’t_a_crime என்ற ஹாஷ்டாக்குடன் தாங்கள் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

“குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர்கள் சுதந்திரமாக திரியும் போது, பெண்கள் சந்தோஷமாக நடனமாடுவதற்காக கைது செய்யப்பட்டதை கண்டு இந்த உலகம் சிரிக்கும்” என்று அந்நாட்டு வலைப்பூ எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி கருத்து தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here