பிரபல பாடகியை குத்திக் கொன்றது கணவனா?

பிரபல சிங்களப் பாடகி பிரியாணி ஜயசிங்க அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகத் தெரிவித்த பொலிசார், பாடகியின் கணவரை சந்தேகத்தில் கைதுசெய்துள்ளதாகக் கூறினர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்தரிக்கோல்களையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here