கூட்டத்திற்கு சற்று முன்னராக சராவிற்கு தகவல் வழங்கிய சுமா தரப்பு!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று  (1) வடமராட்சி மாலுசந்தியில் இடம்பெற்றது.

சமகால அரசியல் கருத்தரங்கு என நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்தான். இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெயரில் சுமந்திரன் அணி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் கலந்து கொள்வார்கள் என குறிப்பிட்டு, ஈ.சரவணபவன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும், அவர்கள் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை.

இதில் ஈ.சரவணபவன் கொதிப்புடன் இருப்பதாக அறிய முடிகிறது. சரவணபவனின் பெயரை குறிப்பிட்டு பத்து நாளின் முன்னர் அழைப்பிதழ் அச்சிட்டு, பொதுமக்களிற்கு விநியோகிக்கப்பட்டு விட்டபோதும், கூட்டம் நடந்த தினமான நேற்று காலையில்தான் சரவணபவனிற்கு ஏற்பாட்டாளர்கள் தொலைபேசியில் தகவல் வழங்கி, கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இது தன்னை அவமதிக்கும் விதமானது என சரவணபவன் கருதுகிறார். ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே அப்படி நடந்ததாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால்தான் நேற்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here