இரட்டை குடியுரிமையுடன் யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவியில் EPDP ஜெகன்: த.தே.கூ வழக்கு தாக்கதல்!

யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பி சார்பில் உறுப்பினராக தேர்வாகியுள்ள  குகேந்திரன் (ஜெகன்)  அந்த பதவியை வகிக்க தகுதியற்றவர் என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நியமனப்பட்டியல் உறுப்பினரான லோகதயாளன் என்பவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளரான ஜெகன் பிரித்தானியா, இலங்கை குடியுரிமைகளை கொண்டிருக்கிறார். இரட்டை குடியுரிமையை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடவோ, உறுப்பினராக பதவிவகிக்கவோ தகுதியற்றவர் என்றே மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை விவகாரத்தில் கீதா குமாரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here