கழுத்தில் வாள் வைத்து தென்மராட்சியில் கொள்ளை!

வட்டுக்கோட்டையில் 59 வயது பெண்மணியை மிரட்டி பாலியல் வல்லுறவு புரிந்து, 20 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது. இது தென்மராட்சியில் நடந்துள்ளது.

மீசாலை கிழக்கைச் சேர்ந்த இராசரத்தினம் இராசகுமார் என்பவர் வீட்டிலேயே நேற்று முன்தினம் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவியின் சகோதரிகள் வவுனியா, விடத்தற்பளையிலிருந்து நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டிற்கு வந்திருந்தனர். விடத்தற்பளையிலுள்ள உறவினர் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்வதற்காக வந்திருந்தனர்.

இரவு 12 மணியளவில் வீட்டு விறாந்தையில் படுத்திருந்த குடும்பத்தலைவரின் கழுத;தில் வாளை வைத்து கொள்ளையர்கள் மிட்டியுள்ளனர்.  வீட்டிலிருந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றுவித்தனர். தாலிக்கொடி, காப்பு, சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 20 பவுண் நகைகள், 21 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here