மகளிர் குத்துசண்டை: அரையிறுதியில் அனுஷா கொடித்துவக்கு!

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் அனுஷா கொடித்துவக்கு மகளிருக்கான குத்துச்சண்டை கோதாவில் 45-48 கிலோ கிராம் எடைப்பிரிவில் அரையிறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை​ பெற்றார்.

இன்றைய நான்காம் நாள் நிறைவில் 01 வெள்ளி , 02 வெண்கலப்பதக்கங்களுடன் இலங்கை 15 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஷ்டில் நடைபெறுகிறது.

இதில் மகளிருக்கான காலிறுதிப்போட்டியில் 45-48 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கையின் அனுஷா கொடித்துவக்கு கெமென் தீவுகளைச் சேர்ந்த ப்ரென்டி பார்ன்சை சந்தித்தார்.

கோதாவில் உச்சபட்ச ஆற்றலை வௌிப்படுத்திய அனுஷா 03 சுற்றுக்களையும் தனதாக்கி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.

குத்துச் சண்டை கோதாவில் மூன்றாம் இடத்திற்கான போட்டிகள் நடத்தப்படாததால், அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையும் வீர வீராங்கனைகளுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும்.

இதன்படி அரையிறுதிப் போட்டியில் அனுஷா கொடித்துவக்கு தோல்வி அடைந்தாலும் அவருக்கு வெண்கலப் பதக்கத்தை வெற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here