விமானப்படை யாழில் நடத்திய மிகப்பெரிய மனிதப்படுகொலை: நவாலி தேவாலய தாக்குதலின் 23வது நினைவுநாள் இன்று!

இலங்கை விமானப் படையினர் நடத்திய மிகப்பெரிய மனிதப்படுகொலைகளில் ஒன்றான நவாலி படுகொலையின் 23வது நினைவுநாள் இன்றாகும். ஒரே தடவையில் 147 தமிழர்களை பலி கொண்ட இந்த படுகொலையின் 23 ஆவது நினைவு நாள் நவாலி தேவாலயத்திலும், சின்ன கதிர்காமர் ஆலயத்திலும் அனுட்டிக்கப்படவுள்ளது.

1995இல் யாழ் குடாநாட்டை கைப்பற்ற முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்தது. ஆகோர எறிகணை தாக்குதல்களால் வலிகாமம் தெற்கு, மேற்கு, வடக்கு, தென் மேற்கு பகுதி மக்கள் இடம்பெயர்ந்து நவாலி பகுதியில் தங்கியிருந்தனர். சென்.பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருந்தனர்.

23வருடங்களின் முன்னர் இதே நாளில் விமானப்படையின் புக்காரா விமானங்கள் 13 குண்டுகளை மக்கள் குடியிருப்புக்கள், ஆலயங்களை இலக்கு வைத்து வீசின.

நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், அயலிலிருந்த 67 வீடுகள் முற்றாக அழிந்தன. 147 மக்கள் துடிதுடித்து கொல்லப்பட்டனர்.Image result for நவாலி தேவாலயத் தாக்குதல்

எரிபொருள் தடை, மருந்துத்தடைகளால் மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ, சிகிச்சையளிக்கவோ முடியாமல் போனது. 360 பேர் வரை காயமடைந்தனர். பலர் அவயங்களை இழந்தனர்.

சண்டிலப்பாய் பிரதேசசெயலக பிரிவில் கடமையாற்றிய ஜே-134 நவாலி வடக்கு கிராம அலுவலரான செல்வி ஹேமலதா செல்வராஜா, சில்லாலை பிரிவு கிராம அலுவலர் பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளை ஆகியோர் கடமைநேரத்தில் மரணமானார்கள்.

மக்களிற்கு உணவு, தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த தொண்டர்கள் 48 பேரும் கொல்லப்பட்டனர். Image result for நவாலி தேவாலயத் தாக்குதல்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியோ, இழப்பீடோ கிடைக்கவில்லை. பாதிப்பு விபரங்களை அரசு சேகரித்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்றையதினம் நவாலி சென்பீற்றர்ஸ் ஆலயத்திலும், சின்னக்கதிர்காம முருகன் ஆலயத்திலும் விளக்கேற்றப்பட்டு, விசேட பூசை வழிபாடுகள் நடக்கவுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here