கோட்டா, கரன்னகொட மீது குற்றம்சாட்டும்படி நிசாந்த சில்வா அழுத்தம் கொடுத்தாராம்!

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படை அதிகாரி அட்மிரல் டி.கே.பி.தஹநாயக்க, நேற்று (28) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

தன் மீதான வழக்கு திட்டமிட்டு சோடிக்கப்பட்டது என தெரிவித்தார்.

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது குற்றம்சாட்டும்படி, சிஐடி விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, தனக்கும் மனைவிக்கும் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிக் முன், நேற்று இரண்டாவது தடவையாக தஹநாயக்க சாட்சியமளித்திருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here