பொன் அணிகள் போர்: சென்.பற்றிக்ஸ் பலமான நிலையில்!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (28) ஆரம்பமாகியது. நாளையும் இடம்பெறும்.

சென் பற்றிக்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டி, 103 வது போட்டியாகும்.

இதன் போது நாணச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென் பற்றிக்ஸ் கப்டன் ஐவன் றொசாந்தன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

யாழ்ப்பாணக் கல்லூரி 52 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதிகபட்சமாக ஏ.கெளசிகன் 22 ஓட்டங்களையும், அணித்தலைவர் எம்.சிந்துஜன் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பற்றிக்ஸ் கல்லூரியின் டி.டெனீசியஸ் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதையடுத்து, தனது முதலாம் இன்னிங்சை தொடங்கிய சென்.பற்றிக்ஸ் அணி, முதலாம்நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை பெற்றது.

டி.டிலெக்சன் 60 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். எஸ்.கீர்த்தனன் 30 ஓட்டங்களுடனும், எஸ்.பி.கஸ்ரோ 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை காலை 09:30 மணிக்கு தொடர் ஆரம்பமாகவுள்ளது.

2014ம் ஆண்டு இடம்பெற்ற தொடரில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதன்பின்னர், இந்த ஆண்டே போட்டி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் 1917ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை, 2014ம் ஆண்டு போட்டியின் போது இடம் பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை போடடிகள் இடைநிறுத்திவைகக்ப்பட்டு 2019ம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மட்டும் நடைபெற்றது.

இவ்வருடம் 2020 இல் 103வது வருட இரு நாள் போட்டியும், 28வது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி 07 மார்ச் 2020 இலும், யாழ் மாவட்டத்திலே முதல் முறையாக ரி20 கிரிக்கெட் போட்டி 09 மார்ச் 2020 இலும் சென் பற்றிக்ஸ் கல்லாரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென் பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் அருட்பணி P. திருமகன், யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய DR. D. S. சொலமன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் பெரும் முயற்சியினால் மீண்டும் சகல போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இருநாள் போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி 32 தடவைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 32 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. 1 போட்டி இரத்துச் செய்யப்பட்டது. மிகுதிப் போட்டிகளின் விபரம் கிடைக்கப் பெறவில்லை.

ஒருநாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50ஓவர்கள்) 20 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும், 6 தடவைகள் யாழ்ப்பாணக் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பிலிப் ஜவன் றொசாந்தனும், யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் ஆ. சிந்துஜனும் தலைமை தாங்குகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here