சிவகார்திகேயனா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்!

சின்னத்திரையில் சாதாரண கலைஞராக தனது பயணத்தை தொடங்கி விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியாக்கி இருந்த வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சீமா ராஜா என்ற படத்தில் பொன்ராம் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்காக தாடி மீசையுமாக தனது லுக்கை முற்றிலுமாக மாற்றி இருந்தார்.

இதே தாடி மீசையுடன் ஒரு போட்டோஷூட் நடத்தலாம் என நடிகர் ஒருவர் சிவாவுக்கு கூற அதன்படி தற்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த புகைப்படத்தில் சிவா முற்றிலுமாக மாறி வேறொரு லுக்கில் தோற்றமளிக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here