ஆண் நண்பருடன் நெருக்கமாக ஜூலி: கலாய்த்த நெட்டிசன்கள்!

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமானவர் ஜூலி. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு அவருக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துகொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இரக்கும் ஜூலி, தனக்கு வாழ்த்து தெரிவித்த யாருக்குமே பதிலளிக்கவில்லை. சிலநாள் மௌனத்தின் பின் இப்பொழுது திடீரென அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டார்.

“நான் என்னுடைய நெருங்கிய நண்பருடன் அந்தமானில் FUN செய்து கொண்டிருந்தேன். இதனால் தான் உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை” என்று நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசங்கள் “உன்ன யாரும் இங்க மிஸ் பண்ணல. அந்தமான் போய்ட்டு வந்ததை இப்போ எல்லாருக்கும் சொல்லணும் அதான…!” என்று கலாய்த்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here