3 வருடமாக பூமியை சுற்றிவரும் குட்டி நிலவு: பூமியை மோதலாம்!

கடந்து மூன்று ஆண்டுகளாகக் பூமியை குட்டி நிலா ஒன்று சுற்றி வருகிம் தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் நிகழம் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும் கேம்பிரிஜில் உள்ள ‘மைனர் பிளானட் சென்டர்’ விடுத்துள்ள செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில்,

பூமியைச் சுற்றி வரும் புதிய ‘குட்டி நிலவு’ ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, ‘2020 சிடி’ எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து 3 ஆண்டுகளாக இந்தக் குட்டி நிலா பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம். இந்த நிலவு நம்முடன் நீண்ட காலம் இருக்காது.

இது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து விட கூடும். இதற்கு முன்னர், 1991ம் ஆண்டு ‘1991 விஜி’ எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில ஆண்டுகள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. அதேபோல் 2006 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் பாதையில் சென்று விட்டது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here