காதலனை கொல்ல வாடகைக் கொலையாளியை அமர்த்திய கனடா நீலப்பட நடிகைக்கு சிறை!

கனடாவை சேர்ந்த முன்னாள் ஆபாசப்பட நட்சத்திரம் கத்ரீனா டான்ஃபோர்ட் (32) ஒப்பந்தக் கொலை குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதையடுத்து அவருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

கத்ரீனா டான்ஃபோர்த் – லின் ப்ளெசண்ட் என்ற பெயரில் ஆபாசப்படங்களில் தோன்றினார். தற்போது ஆபாசப்பட உலகிலிருந்து வெளியேறி, சட்டத் துணையாளராக பயிற்சி பெற்று வருகிறார்.

தனது முன்னாள் காதலனை கொல்ல அவர் ஆபாச நட்சத்திரமாக இருந்த காலத்தில் ஒரு இரகசிய கொலையாளியை வாடகைக்கு அமர்த்தியதாக அவர் 2018இல் கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட 2 குற்றச்சாட்டுக்களை கடந்த டிசம்பரில் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரினர்.

$ 5,000 பணத்திற்காக கொலையாளியை வாடகைக்கு அமர்த்தியிருந்தார். கொலையின் பின்னர், ஒரு தொகை பணத்தை அனுப்பியதுடன், நன்றி என குறிப்பிட்ட அட்டையையும் அனுப்பி வைத்துள்ளார்.

கத்ரீனா குழந்தைப்பருவத்தில் பாலியல் வன்முறையை உள்ளடக்கிய ஒரு சிக்கலான குழந்தைப்பருவத்தை கொண்டிருந்ததாகவும், அதனால் அவருக்கு குறைந்த பட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறும் அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், அவருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here