பிரபல நடிகரின் மகன் திருமணம் பாலியல் வழக்கால் நிறுத்தம்!

ஊட்டியில் நடைபெறவிருந்த இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவருடைய மகன் மகா அக்ஷய். இவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மகாஅக்ஷயை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமாக உதகையில் உள்ள ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணத்தில் பங்கேற்க பல விஐபிகள் உதகையில் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் பாதிக்கபட்ட பெண் டெல்லி போலீஸாரிடம் இதுதொடர்பாக புகார் அளிததுள்ளார். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

முன்னதாக  பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று வழக்கு ஒன்றை  அந்த பெண், அக்சய் மீது காவல் நிலையத்தில் புகார் செய்ததுடன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here