விஜய்யின் சர்க்கார் போஸ்டரை நீக்கிய சன் பிக்சர்ஸ்! ஏன் தெரியுமா?

விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இதற்கு முன் கத்தி மற்றும் துப்பாக்கி என இரண்டு ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்தவர். படத்தின் படபிடிப்பு 60% முடிந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ‘சர்க்கார்’ படத்தில், நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, புகைபொருட்களையும் புகைபழக்கத்தையும் மறைமுகமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சர்க்கார் படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி தமிழக அரசின் பொது சுகாதாரதுறை படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து, விஜய் புகைப்பிடிப்பது போன்று இருந்த போஸ்டரை, கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here