பல நாடுகளிற்கும் ஊடுருவும் கொரோனா ஆபத்து!

சீனாவில் தோன்றிய கொரோனா (கோவிட்-19) வைரஸ் உலகளவில் அச்சுறுத்தும் ஆபத்தாக பரிணமித்து வருகிறது. சீனாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா தற்போது ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளில் பரவி வருகிறது.

தென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் தற்போது கொரோனாவினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் தொடர் போராட்டத்தின் விளைவாக உயிரிழப்புக்கள், தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தாலும், அதை முழுமையாக கட்டுப்படுத்துவது இன்னும் சாத்தியமாகவில்லை.

கொரோனா உயிரிழப்பு 11 ஆக உயர்ந்துள்ளதாக தென் கொரியா புதன்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் 169 நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்ட பின்னர் நாட்டில் இப்போது குறைந்தது 1,146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டேகு நகரத்தையும், அதைச் சுற்றியும் உள்ள பகுதிகளிலே பாதிப்பு அதிகமாக உள்ளன.

இத்தாலியிலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில், 80,000 பேருக்கு அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குவைத், ஈராக், ஓமான், பஹ்ரைன், சுவிற்சர்லாந்து நாடுகளும் தமது நாட்டில் கொரோனா பாதிப்புள்ளவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here