‘என்னை விட வடிவேலு கியூட்’: ராஷ்மிகா சரண்டர்!

நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை ராஷ்மிகா படத்துடன் இணைத்து சிலர் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டனர். இது குறித்து ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், தேவதாஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா பெங்களூருவில் சொந்தமாக தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி தஸ்தாவேஜுகளை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கில் நிதினுடன் ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் தற்போது திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை விளம்பரப்படுத்த ராஷ்மிகா விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்து போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், அதே தோற்றத்தில் உள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை ராஷ்மிகா படத்துடன் இணைத்து சிலர் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டனர்.

ராஷ்மிகாவின் அனைத்து புகைப்படங்களும் வடிவேலு கதாபாத்திரங்களின் சாயலில் இருந்ததால் இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. மீம்ஸ்களை ராஷ்மிகாவும் பார்த்து ரசித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், “என்னால் இதனை ஒப்புக்கொள்ள முடியாது. வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here