அப்பா உங்களுக்கு வயசாயிடுச்சு: தோனிக்கு வயதாவதைப் பாடல் மூலம் உணர்த்திய மகள் ஜிவா

தோனிக்கு வயதாகிக் கொண்டே செல்கிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அப்பா வயசாகிடுச்சுப்பா என்று ஜிவா பாடல்பாடி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கூல் கேப்டன், பினிஷிங் நாயகன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 37-வது பிறந்த நாளாகும். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியினர், தோனியின் பிறந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடினார்கள்.

கார்டிப் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில், மனைவி சாக்ஷி, மகள் ஜிவா, சக அணி வீரர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தோனி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

அப்போது தோனியின் மகள் ஜிவா, ‘அப்பா உங்களுக்கு வயாசாகிடுச்சு’ என்று இந்தியில் பாடலைப் பாடி அனைவரையும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.

பிசிசிஐ, கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் தோனிக்கும், அவரின் மனைவி, மகளுக்குm வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தோனி தனது மகள் ஜிவாவுடன், சக வீரர்களுடன் விளையாடிய காட்சி

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், சக வீரர்கள், ஜூனியர் வீரர்கள் என பலரும் தோனிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

விராட் கோலி கூறுகையில், “37 வயதிலும் உடற்தகுதியுடன், வேகமாகவும் நீங்கள் செயல்படுவது பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. தோனிக்கு வாழ்வில் அனைத்துச் சிறப்புகளும் கிடைக்க வாழ்த்துகிறேன். இன்னும் உங்களுடன் நான் விளையாடி வருவது எனக்குக் கிடைத்த பெருமையாகும். உங்களின் காலடியில் நான் தொடங்கினோம், அன்பையும், மரியாதையும் பகிர்ந்து கொண்டோம். உங்களைச் சுற்றி நேர்மறையான ஊக்கமும், உற்சாகமும் இருக்க வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தோனியின் மனைவி சாக்‌ஷி தோனியுடன் நிற்குமாறு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உருக்கமாக எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ”பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே.. நீங்கள் எப்படிப்பட்ட மனிதநேயமுள்ளவர் என்பதைக் கூற வார்த்தைகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக உங்களிடம் பல்வேறு நல்ல பழக்கங்களை  கற்றுக்கொண்டேன். இது தொடரும். வாழ்க்கையை மிகவும் நேர் கோணத்திலும், எதார்த்தமாகவும் பார்க்க உதவிய உங்களுக்கு எனது நன்றி” என்று சாக்‌ஷி தோனி தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோனி, 500-வது போட்டியில் நீங்கள் விளையாடியதற்கு வாழ்த்துகள். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும், அப்பாற்பட்டவர்களுக்கும் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

விவிஎஸ் லட்சுமண் ட்விட்டரில் வாழ்த்துச்செய்தியில், ”தோனிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு மிகழ்ச்சியும், உற்சாகமும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here