உலக அதிபார குத்துச்சண்டை சம்பியனானார் டைசன் பெரி!

உலக அதி­பார குத்­துச்­சண்டைப் போட்­டிகளின் புதிய சம்பியனாக டைசன் பெரி தெரிவானர். கடந்த 2ம் திகதி லொஸ் வெகாஸில் நடை­பெற்ற ஆட்டத்தில் ஏழா­வது சுற்றில் சம்பியன் டியொன்டே வைல்­டரை வீழ்த்தி, உலக குத்­துச்­சண்டைப் பேரவையின் அதி­பாரப் பிரிவு குத்­துச்­சண்டை சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தார்.

பிரித்­தா­னி­ய­ரான டைசன் பெ­ரி­யிடம் டியொன்டே வைல்டர் அடைந்த தோல்­வி­யா­னது அவ­ரது முத­லா­வது தோல்­வி­யாகும்.14 மாதங்­க­ளுக்கு முன்னர் இவர்கள் இரு­வரும் மோதிய குத்­துச்­சண்டைப் போட்டி சம­நி­லையில் முடி­வ­டைந்­தி­ருந்­தது. ஆனால் இந்தப் போட்­டியில் டியொன்டே வைல்­டரை கடு­மை­யாகத் தாக்­கிய டைசன் பெரி  நொக் அவுட் முறையில் வெற்­றி­பெற்று உலக அதி­பார குத்­துச்­சண்டை சம்­பி­ய­னானார்.

போட்­டியின் 7வது சுற்றில் டைசன் பெரியின் கடு­மை­யான தாக்­கு­தல்­களை எதிர்கொள்ள முடி­யாமல் டியொன்டே வைல்டர் பெரும் தடு­மாற்­றத்தை எதிர்கொண்டார். அந்த சந்­தர்ப்­பத்தில் அவ­ரது இடது காதி­லி­ருந்து இரத்தம் கசிந்­ததுடன் அவ­ரது வாயி­லி­ருந்தும் இரத்தம் வழிந்தோடியது. இதனை அடுத்து மத்தியஸ்தர் கெனி பேலெஸ் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

ஆட்டத்தை இடைநடுவில் நிறுத்த வைல்டர் தரப்பு முயற்சித்த போதும், அது முடியவில்லை.

முன்னாள் சம்பியனான வைல்டர் இந்த போட்டியில் இயல்பாக ஆடவில்லை, அவரது கால்களின் நகர்வு வழக்கமானதாக இருக்கவில்லையென விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். போட்டியின் பின் வைல்டரும் அதை ஆமோதித்திருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here