நெடுந்தீவு பிரதேசசபையை சுயேட்சைக்குழுவிற்கு தாரைவார்ப்பதா?: கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு!

நெடுந்தீவு பிரதேசசபையை சுயேட்சைக்குழுவின் கைகளில் தாரை வார்க்க சில தன்னிச்சையாக நடவடிக்கைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடப்பதாக உறுப்பினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். ரெலோ அமைச்சின் செயலாளர் என்.சிறிகாந்தாவே இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தும் அவர்கள், தமது கருத்தை மீறி அப்படியான முடிவுகள் எட்டப்பட்டால், அதை ஆதரிக்கப்போவதில்லை என்றும் எச்சரித்துள்ளனர்.

நெடுந்தீவு பிரதேசசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர், சுயேட்சையின் இரு உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சியை கைப்பற்றியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதல் இரண்டு வருடமும், சுயேட்சைக்கு அடுத்த இரண்டு வருடமும் என்ற நிபந்தனையுடனேயே இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நெடுந்தீவு உபதவிசாளர் அண்மையில் காலமானார். அவரது இடத்திற்கு புதியவரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு இரண்டுமுறை முயற்சிக்கப்பட்டபோதும், சுயேட்சை உறுப்பினர்கள் அந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் கலந்துகொள்ளாததற்கு காரணம்- கூட்டமைப்பின் உபதவிசாளரை ஆதரிப்பதெனில், தவிசாளரை தமக்கு உடனடியாக விட்டுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைக்கு ரெலோ செயலாளர் சிறிகாந்தாவும் சாதகமாக நடப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. சுயேட்சைக்குழுவிற்கு தவிசாளரை விட்டுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் அவர் தகவல் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது கூட்டமைப்பின் ஒரு பகுதி உறுப்பினர்களிடம் அதிருப்தியை கிளப்பியுள்ளது.

“காரைநகர் பிரதேசசபை தவிசாளராக தனது உறவினரை நியமிக்க, சிறிகாந்தா ஈ.பி.டி.பியுடனும் பேச்சு நடத்தினார். தவிசாளர் பதவியை கோரிய சுயேட்சையை தூக்கி எறிந்தார். ஆனால், நெடுந்தீவில் மாறி நடக்கிறார்“ என நெடுந்தீவு பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தமிழ் பக்கத்திடம் விசனம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here