டிரம்ப் ஒரு குழந்தை:- சித்தரிக்கும் இராட்சத பலூன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஒரு குழந்தையாக சித்தரிக்கும் இராட்சத பலூன் ஒன்று அடுத்து வாரம் அவரது லண்டன் பயணத்தின் போது பறக்கவிடப்படும்.

லண்டன் ஆளுநர் சாதிக் கான், போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

கலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 11.30 வரை 30 மீட்டர் உயரத்தில் அந்த இராட்சத பலூன்  நாடாளுமன்றத்தின் அருகில்  பறக்கவிடப்படும்.

அமைதியான போராட்டம் வெவ்வேறு வடிவங்களில் வரலாம் என்பதை ஆளுநர் உணர்ந்துள்ளதால் இதற்கு இணக்கம் தெரிவிக்க 10,000க்கும் மேற்பட்டோர் இணையத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இம்மாத வாக்கில், பிரதமர் திரேசா மேயையும் எலிசபெத் அரசியாரையும் சந்திக்க அதிபர் டிரம்ப் பிரிட்டன் செல்கிறார். அப்போது அங்கு பெரும் போராட்டங்கள் நடைபெறக்கூடும் என கருத்து நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here