யாழில் களமிறங்கவுள்ள வேட்பாளர்களை இறுதி செய்தது முன்னணி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் பெற்ற வாக்கு அதிகரிப்பை தொடர்ந்து தக்க வைக்கலாமென்பது முன்னணியின் நம்பிக்கை.

இதுவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக ஊடகப் பிரச்சாரங்களிலேயே அதிக அக்கறை காண்பித்து வந்தது. பேஸ்புக்கில் முன்னணி செயற்பாட்டாளர்களிடம் சிக்கிய யாரும், உருப்படியாக வீடு போய் சேர முடியாதென்ற நிலைமையிருந்தது.

இம்முறை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் சமூக ஊடகப் பிரச்சாரத்தில் அதீத கவனம் செலுத்த, முன்னணி பொக்கற் மீற்றிங்களில் அக்கறை காட்டி வருகிறது. வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் உள்ளிட்ட சிலரை உள்ளடக்கி சுமந்திரனின் சமூக ஊடக பிரச்சார பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அணி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சுமந்திரனின் பிறந்ததினம் வந்தது. இதில் பிரச்சார பிரிவினர் பல போலி கணக்குகள் மூலம் வாழ்த்து தெரிவித்து, சமூக ஊடகங்களை நிறைக்க வைத்திருந்தனர். அதன்மூலம், ஏற்பாட்டாளர்கள் மகிழ்ந்து, பிரச்சார அணியை பாராட்டியிருந்தனர். அந்த உற்சாகத்தில் பிரச்சார அணி தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

இம்முறை, நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்ச முயற்சி மேற்கொண்டு பார்ப்பது என முன்னணி தீர்மானித்துள்ளது. இம்முறை பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் போனால், தமிழினத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளும், செயற்பாட்டியக்கமும் தடம்புரண்டு விடுமென முன்னணியின் வேட்பாளர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

கடந்த பத்து வருடங்களின் தமிழினத்தின் அரசியல் கோரிக்கைகள் வலுவிழந்து செல்வதும், தமிழ் தேசிய அரசியல் கொழும்பு மைய பெரிய கட்சிகளை சார்ந்து செயற்பட தொடங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டி, தமிழ் தேசிய அரசியலில் ஒரு சடுதியான திருப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை எதிர்பார்ப்பதாக கூறினார்.

இம்முறை, யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை பெரும்பாலும் உறுதி செய்து விட்டது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வி.மணிவண்ணன், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி சுகாஸ், நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் வாசுகி ஜெயக்குமார், சாவகச்சேரி நகரசபைஉறுபபினர் ஜெயக்குமார், கொழும்பு ரோயல் கல்லூரியின் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் கணபதிப்பிள்ளை ஆகிய எட்டுப் பேரும் வேட்பாளர்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளனர். இன்னும், இரண்டு பொருத்தமான வேட்பாளர்களை முன்னணி தேடி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here