இந்தவார ராசிபலன் (23.2.2020- 29.2.2020)

சூரியன், சுக்கிரன், குரு, புதன், சந்திரன் அளப்பரிய நற்பலன் வழங்குவர். நல்ல செயல்களால் சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். நிலுவைப்பணிகள் நிறைவேற குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர்.

வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி அதிக அன்பு, பாசம் கொள்வார். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் அதிக உழைப்பினால் நன்மை பெறுவர். மாணவர்களுக்கு புதியவரின் நட்பு பயன் தரும்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

சூரியன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். உறவினரின் கூடுதல் அன்பு, பாசம் மகிழ்ச்சி அளிக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். வாகனப் பயன்பாடு அதிகரிக்கும்.

பிள்ளைகள் அறிவுத்திறனில் மேம்பட தகுந்த ஆலோசனை சொல்வீர்கள். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். பகைவரால் உருவான சிரமம் விலகும். மனைவி ஒற்றுமை குணத்துடன் செயல்படுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு பெறுவர்.

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

புதன், குரு, சந்திரனால் நற்பலன் கிடைக்கும். உதவியவர்களுக்கு நன்றி சொல்வீர்கள். நிலுவைப் பணிகள் எளிதாக நிறைவேறும். வாகனப் பயன்பாடு அதிகரிக்கும்.

பிள்ளைகள் உங்களின் அறிவுரையை தயக்கமுடன் ஏற்றுக் கொள்வர். சொத்தின் பேரில் கடன் பெற வேண்டாம். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். குடும்பத்தில் ஒற்றுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீரான அளவில் இருக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து செயல்படுவர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் அபார ஞாபகத்திறனால் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் அதிர்ஷ்டபலன் வந்து சேரும். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். வாகனப் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.

வழக்கு, விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு சாதகமான தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் செழித்து பணம் சேமிப்பாகும். பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் தங்களின் அபார ஞாபகத்திறனால் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

ராகு, புதன், குரு, சுக்கிரன், சந்திரனால் வியத்தகு நற்பலன்கள் கிடைக்கும். செயல்கள் அனைத்திலும் திறமை வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவர்.

வாகனப் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம்பெறும். மனைவி ஒற்றுமை குணத்துடன் செயல்படுவார். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு அதிக சலுகை கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம் : 25.2.2020 பகல் 12:20 – 27.2.2020 நள்ளிரவு 12:01 மணி
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

சூரியன், சந்திரன் அனுகூல பலனை வழங்குவர். சமூக நிகழ்வுகள் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும்.

வாகனப் பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். பிள்ளைகள் பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்க தயங்குவர். எதிர்ப்பாளரிடம் விலகுவது நல்லது. மனைவியிடம் உறவினர்களின் குடும்ப விவகாரங்கள் பேசுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் செலவில் சிக்கனத்தை பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம் : 27.2.2020 நள்ளிரவு 12:02 – 29.2.2020 நாள் முழுவதும்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு வெற்றி தரும்.

செவ்வாய், புதன், கேது, சனீஸ்வரர், சந்திரன் கூடுதல் நற்பலனை தருவர். உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். வளர்ச்சிப் பாதைக்கான புதியவழி பிறக்கும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.

பிள்ளைகள் படிப்பு, ஆன்மிக கருத்துக்களில் தெளிவு பெறுவர். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உருவாகும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனையின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

குரு, சுக்கிரன், சந்திரனால் நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தாயின் அன்பு, ஆசி மனதில் ஊக்கம் தரும். வெளியூர் பயணம் அளவுடன் இருக்கும்.

பிள்ளைகள் படிப்பு, வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பர். வழக்குகளில் தீர்வு கிடைக்க தாமதமாகலாம். மனைவி கருத்திணக்கத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்திடம் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமுடன் பயில்வர்.

பரிகாரம் : அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

சூரியன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். கடந்த கால உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உறவினர், நண்பர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கு தேவையானதை செய்வீர்கள்.

கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். பெண்கள் நற்செயல்களால் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். மாணவர்கள் நன்றாக படித்து பரிசு, பாராட்டு பெறுவர்.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

சுக்கிரன், ராகு, சந்திரனால் நன்மை வந்து சேரும். மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பர். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியுடன் கூடிய பணவரவு உண்டு. பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து அதிக சலுகை பெறுவர். பெண்கள் புத்தாடை, நகை வசதிக்கேற்ப வாங்குவர். மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சி முறையை கற்றுக்கொள்வர்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய நன்மை வழங்குவர். நிலுவைப் பணிகளை புதிய யுக்தியால் நிறைவேற்றுவீர்கள். உறவினரின் உதவி நெகிழ்ச்சி தரும்.

புதிய வீடு, வாகனம் வாங்குபவர் ஆவணங்களை சரி பார்த்து வாங்கவும். பிள்ளைகள் நல்வழியில் நடக்க ஆர்வமுடன் உதவுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம்பெறும். மனைவி வழி சார்ந்த உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் புதியவரின் ஆதரவில் வளரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு சகல நன்மை அளிக்கும்.

புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். பணிகளை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாதம் செய்வர். மருத்துவ சிகிச்சையால் நோய் தொந்தரவு குறையும். மனைவியின் மனதில் எதிர்கால வாழ்க்கை குறித்த நம்பிக்கையை வளர்ப்பீர்கள். தொழிலில் வளர்ச்சி பெற கூடுதலாக உழைப்பீர்கள். பணியாளர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம் : மகாலட்சுமி வழிபாடு செல்வவளம் தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here