ட்ரிங்க் அண்ட் டிரைவ் – முதல் ஆளாக மாட்டிய மெகா இயக்குனரின் மகன்!

தமிழகத்தில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. குடித்து விட்டு வண்டி ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவைகளுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர்களின் இமயம் பாரதி ராஜா அவர்களின் மகனும் இயக்குனருமான மனோஜ் பட்டப்பகலில் குடித்து கார் ஒட்டி போலீசிடம் சிக்கியுள்ளார்.

இதனால் மனோஜின் காரை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக பெரிய இயக்குனரின் மகன் இவ்வாறு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

drink and drive

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here