நான் திருமணம் செய்யாததற்கு அவர்தான் காரணம்: பழசையெல்லாம் போட்டுடைத்த தபு!

“நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு இந்த பிரபல நடிகர் தான் காரணம் எனப் பகிரங்கமாகவே நடிகை தபு குற்றசாட்டியுள்ளார்.

தமிழில் ‘காதல் தேசம்’, ‘சிறை’ போன்ற படம் மூலம் புகழ் பெற்றவருமான பிரபல போலிவுட் நடிகை தபுக்கு 46 வயதாகிறது. ஆனால், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை அவர் இப்படி கூறியிருக்கிறார்.

“நான் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத் தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். திருமணம் செய்து கொண்டு வாழ்வது சிறப்பானதா? தனியாக இருப்பது நல்லதா என்று கேட்கிறார்கள்?

”எனக்கு ஒரு பகுதி மட்டுமே தெரியும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. இன்னொரு பகுதி தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் பதில் சொல்ல முடியும்? எனக்கு அந்த அனுபவம் இருந்தால் திருமணம் சிறந்ததா? திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது சிறந்ததா? என்பதைச் சொல்வதற்கு..!

மேலும், எனக்கு திருமணம் ஆகாததற்கு காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான். நானும் அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்று விட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார்.

என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார். அவரால் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை.

இவ்வாறு நடிகை தபு வெளிப்படையாக தனது கருத்தைக் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது நடிகர் அஜய் தேவ்கன் 1999 ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here