ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நாசி, தாயையும் கொன்று தற்கொலை!

ஜேர்மனியில் ஹனாவ் நகரில் இரண்டு மதுபானச்சாலைகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியவர், தனது தாயையும் கொன்று விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுபானச்சாலை தாக்குதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்திருந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 11 ஆக உயர்ந்துள்ளது.

கொலையாளி வலதுசாரி நாசி கோட்பாடுகளால் தீவிரமாக ஆக்கிரமிக்கப்பட்ட, வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் சாத்தான் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவராவார்.

டோபியாஸ் ராத்ஜென் (43) தாக்குதலின் முன்னதாக 24 பக்க அறிக்கையொன்றை தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தீவிரவாத கருத்துக்களை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பகுதி, சில ஆசிய நாடுகள், வட ஆபிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு உள்ளிட்ட முழு நாடுகளையும் அழிக்க உறுதி அளித்தார். அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஜேர்மனியர்கள் அவர் ‘தூய்மையற்றவர்கள்’ என்று கருதினர்,

‘மக்கள்தொகையை பாதியாகக் குறைப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது,’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு யூத-விரோத கோட்பாடுகள் மீதான அவரது நம்பிக்கை காரணமாக பெண்களுடனான உறவை அவர் பேணியதில்லை..

ஜேர்மன் கால்பந்து அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல உதவும் திட்டத்தை ராத்ஜென் வெளியிட்டார், மேலும் 10 ஆண்டுகளுக்குள் ஆப்கான் மற்றும் ஈராக் போர்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஹனாவ் நகரில் நேற்றிரவு தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒன்லைனில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், சாத்தான் வழிபாடு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுவதாகக் கூறும் அமெரிக்காவில் நிலத்தடி இராணுவ தளங்களைப் பற்றி ராத்ஜென் கோபப்படுகிறார். அவற்றை தாக்குமாறு வலியுறுத்துகிறார்.

புதன்கிழமை இரவு 10 மணியளவில் தனது சொந்த ஊரில் துப்பாக்கிச் சூடு நடத்தும் முன் ராத்ஜென் அறிக்கையையும் வீடியோக்களையும் ஒன்லைனில் வெளியிட்டார். அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்தனர். பின்னர் அவர் வீட்டிற்குச் சென்று, தனது 72 வயதான தாயைக் கொன்றார், பின்னர் தன்னைத்தானே சுட்டார்.

துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இறந்தவர்களில் தமது நாட்டு குடிமக்கள் ஐவர் உள்ளனர் என்பதை பேர்லினில் உள்ள துருக்கிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இதுவென செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்தாரி இறந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொலிசார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, ஒரு நபர் – அவரது தந்தை என்று நம்பப்படுகிறது – கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் நேரடியாக தாக்குதல்களில் ஈடுபட்டதாக கருதப்படவில்லை.

தாக்குதலை தானே நடத்தியதாக ராத்ஜென் ஒப்புதல் கூறிய கடிதம், வீடியோ என்பன  அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

காரில் சென்று ஷிஷா பார்களில் தாக்குதலை நடத்தியவர், அதை கைவிட்டு வீட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

ஷிஷா பார்கள் என்பது மத்திய கிழக்கு புகையிலையை புகைக்க மக்கள் கூடும் இடங்கள்.

இரண்டாவது தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே, சந்தேக நபரின் கெட்அவே கார் மீட்கப்பட்டது. கண்காணிப்பு வீடியோக்களும் அதிகாரிகளை விரைவாக கொலையாளியின் வீட்டை கண்டுபிடிக்க உதவின. அங்கு அவர் தனது 72 வயது தாயின் உடலுக்கு அருகில் இறந்து கிடந்தார் என்று உள்துறை அமைச்சர் பீட்டர் பியூத் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here