செல்பி மோகம்: உலகின் பெரும் பணக்காரர் தவறி விழுந்து மரணம்!

எச்.என்.ஏ குழுமம் எனும் மாபெரும் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான சீன கோடீஸ்வரர் வாங் ஜியன் (வயது 57) சுற்றுலா சென்ற போது உயரமான ஒரு சுவரிலிருந்து விழுந்து இறந்த அதிர்ச்சி சம்பவம் பிரான்சில் நடந்தது.

செல்பி படம் எடுப்பதற்காக அந்தச் சுவரில் ஏறி தன் குடும்பத்தாருக்கு போஸ் கொடுக்கும் போது அவர் தவறி விழுந்தார். அப்பகுதியில் உள்ள மீட்புக் குழுவினர் அவரை மீட்டு எடுத்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

வாங் ஜியன் விமான நிறுவனம், சுற்றுலா மற்றும் நிதித்துறைகளில் சொத்துக்களைக் கொண்ட எச்என்ஏ குழுமத்தை உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக்க உதவியவராவார்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்பி எடுக்க விரும்பும் இடமாகிய போனியஸ் கிராமத்தில் புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சுவரின் மீது ஏறியபோது வாங் ஜியன் 50 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். பிரான்ஸ் பொலிசார் இந்த சம்பவத்தை ஒரு விபத்தாகக் கருதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here